வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே குகையநல்லூர் கிராமம் வழியே ஓடும் பொன்னை ஆற்றின் குறுக்கே 12 கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய தடுப்பணையை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், வெள்ளம் தேங்கும் அளவுக்கு புதிய தடுப்பணை பலமாக இல்லையென்றால் கட்டியவர்கள் சிறைக்கு செல்வார்கள் என்று எச்சரித்தார்.