உக்ரைன் போரை நிறுத்த மேற்கத்திய நாடுகள் விரும்பினால், அந்நாட்டுக்கு ஆயுத உதவி செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாகப் பேசிய ரஷ்ய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மரியா ஷகரோவா, உக்ரைனின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி உதவி செய்வதை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், குர்ஸ்க் பிராந்தியம் விரைவில் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் எனவும், உக்ரைன் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து இரண்டு கிராமங்களை மீட்டுள்ளதாகவும் ராணுவத் தளபதி ஒருவர் தெரிவித்தார்