வேலூர் காட்பாடி காங்கேயநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பிளஸ் டூ மாணவி ஒருவருக்கு சக மாணவிகள் வளைகாப்பு விழா நடத்தியது தொடர்பாக அவர்களின் வகுப்பாசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருமணமாகாத, கர்ப்பிணியாக இல்லாத அந்த மாணவிக்கு ரீல்ஸில் பதிவேற்றுவதற்காகவே வீட்டில் இருந்து வளையல், பூ, சந்தனம், பன்னீர் சொம்பு போன்வற்றை எடுத்து சென்று சக மாணவிகள் நலங்கு வைத்து காணொளி எடுத்ததாக கூறப்படுகிறது.
வளைகாப்பு நடக்கப்போவதாக நேரம், இடம் போன்றவற்றை குறித்து செல்ஃபோனிலேயே மாணவிகள் டம்மி அழைப்பிதழ் தயார் செய்திருந்ததாகவும் தெரிகிறது.
இது தொடர்பாக தலைமை ஆசிரியர் பிரேமாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி கூறியுள்ளார்.