​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்

Published : Sep 20, 2024 6:25 PM

தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்

Sep 20, 2024 6:25 PM

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெறும் என்று அக் கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி. சாலை கிராமத்தில் மாலை 4 மணி அளவில் மாநாடு நடைபெறும் என அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ள விஜய், தங்களை வழிநடத்தப்போகும் கொள்கைகளையும் அடையப்போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் பெருவிழாவாக மாநாடு நடத்தப்படும் என கூறியுள்ளார்.