சீனாவில் இருந்து பெங்களூரு தனியார் நிறுவனம் ஒன்று இறக்குமதி செய்த 35 கோடி ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் அடங்கிய 40 அடி கண்டெய்னரை திருடியதாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னைத் துறைமுகத்தின் சி.ஐ.டி.பி.எல். என்ற தனியார் சரக்குகளை கையாளும் யார்டுக்கு கடந்த 11-ஆம் தேதி வந்தடைந்த அந்த கண்டெய்னரை ஏற்றி வர லாரி அனுப்பியதாகவும், ஆனால் அங்கு கண்டெய்னர் இல்லை என்றும் கூறி பெங்களூரு நிறுவனம் போலீசாரிடம் புகார் அளித்திருந்தாக தெரிகிறது.
விசாரணையில் சி.ஐ.டி.பி.எல். நிறுவன ஊழியர் இளவரசன் என்பவர் உடந்தையுடன் வேறொரு டிரெய்லர் மூலம் கண்டெய்னரை திருட்டு கும்பல் ஒன்று கொண்டு சென்று திருவள்ளூர் மணவாள நகரில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடித்து மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.