லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
Published : Sep 20, 2024 11:01 AM
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
Sep 20, 2024 11:01 AM
லெபனானில் ஹெஸ்புல்லா இயக்கத்தினர் வைத்திருந்த பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகளை வெடிக்கச்செய்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 37 பேர் உயிரிழந்தனர், ஏராளமானோர் காயமடைந்தனர்.
இத்தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் எனவும் அதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஹெஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா அறிவித்தார். அதைத் தொடர்ந்து, ஹெஸ்புல்லா தயார் நிலையில் வைத்திருந்த நூற்றுக்கணக்கான ராக்கெட் லாஞ்சர் பேரல்கள் மீதும், சில ஆயுதக் கிடங்குகள், கட்டடங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ள இஸ்ரேல் ராணுவம், தாக்குதல் காட்சிகளையும் வெளியிட்டுள்ளது.
ஹெஸ்புல்லா நிலைகள் மீது தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யுவா கலாண்ட் தெரிவித்துள்ளார். போரைத் தவிர்க்க அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்த நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடுத்துள்ளது. உடனடி போர் நிறுத்தத்துக்கு பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலர் டேவிட் லாமி வலியுறுத்தியுள்ளார்.