உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது என பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரின் கத்ராவில் தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் பேசிய அவர், பாகிஸ்தானின் அஜென்டாவை ஜம்மு-காஷ்மீரில் திணிக்க விடமாட்டோம் எனவும் உறுதிபடத்தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவு மீண்டும் அமல்படுத்தப்படும் என்று காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் தெரிவித்துள்ளதன் மூலம், மாநிலத்தில் மீண்டும் ரத்தக்களறியை ஏற்படுத்த அக்கட்சிகள் விரும்புவதாகவும் அதற்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீநகர், லால் செளக்கில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர், ஜம்மு-காஷ்மீர் இளைஞர்கள் கையில் தற்போது கற்களுக்கு பதில் புத்தகங்களும், பேனாக்களும் உள்ளதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.