வேலூர் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவமனை கட்டுமானப் பணிகளை அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு செய்தார்.
கட்டடம் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் கம்பியின் பெயர் என்ன, எந்த கம்பெனியில் வாங்கப்படுகிறது, ஸ்டீல் டெஸ்ட் செய்தீர்களா என அமைச்சர் வேலு அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
பிறகு செய்தியாளரை சந்தித்த அமைச்சர் எ.வ. வேலு, 10 அறுவை சிகிச்சை அரங்கங்களுடன் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவமனை பணிகளை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.