தஞ்சாவூர் பெரிய கோயில் கிரிவலப்பாதை 8 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டதையடுத்து ஏராளமான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் கோயிலை சுற்றி கிரிவலம் வந்தனர்.
தஞ்சாவூர் பெரிய கோயிலை சுற்றி சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிலான பாதையில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் கிரிவலம் நடந்த இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக பணிகள் காரணமாக மூடப்பட்டது.
பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது அப்பாதை சுத்தம் செய்யப்பட்டு கிரிவலத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.