அமெரிக்காவின் ஃபிலடெல்பியாவில், கருப்பின பத்திரிகையாளர்களுக்கான கருத்தரங்கில் பேசிய துனை அதிபர் கமலா ஹாரிஸ், பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.
அதற்கு முன்பாக, காஸா போரை நிறுத்தி பிணை கைதிகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். மேலும், வளைகுடா நாடுகளில் அமைதியான சூழலை உருவாக்குவதன் மூலம் ஈரானின் கை ஓங்குவதை தடுக்க முடியும் என அவர் கூறினார்.