திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்துக்குத் தேவையான மசாலாக்களை கடைகளில் வாங்காமல், மகளிர் சுய உதவிக் குழுக்களை வைத்து நேரடியாக அரைத்துப் பயன்படுத்துவதாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
மசாலா அரவைப் பணிகளை நேரில் பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த மசாலா பொருட்கள் தயாரிப்பதில் 18 வட்டாரங்களை சேர்ந்த 18 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் என்றார்.