​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜப்பான் மக்கள் தொகையில் 29 சதவீதம் பேர் முதியவர்கள்.. பிறப்பு விகிதாச்சாரம் குறைந்து வருவதாக அரசு தகவல்..!

Published : Sep 16, 2024 7:38 PM

ஜப்பான் மக்கள் தொகையில் 29 சதவீதம் பேர் முதியவர்கள்.. பிறப்பு விகிதாச்சாரம் குறைந்து வருவதாக அரசு தகவல்..!

Sep 16, 2024 7:38 PM

65 வயதுக்கு மேற்பட்டோர், மக்கள் தொகையில் அதிக சதவீதம் வசிக்கும் உலக நாடுகளின் பட்டியலில் ஜப்பான் முதலிடம் பிடித்துள்ளது.

ஜப்பானில் ஒருபுறம் பிறப்பு விகிதாச்சாரமும், மக்கள் தொகையும் குறைந்துவரும் நிலையில், மறுபுறம் 65 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு மூன்றரை கோடியாக உயர்ந்துள்ளது.

பிறப்பு விகிதாச்சாரம் தொடர்ந்து குறைந்துவருவதால், இளைஞர் சக்தி குறைந்து தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வயதானோர் மூன்றரை கோடி பேரில் ஒரு கோடி பேர் வேலைக்கு செல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.