நடிகைகள் குறித்து அவதூறாக பேசியதாக மருத்துவர் காந்தராஜ் மற்றும் அவரது பேட்டியை ஒளிபரப்பு செய்த யூடியூப் நிறுவனம், பேட்டி எடுத்த ஊடகவியலாளர் முக்தார் ஆகியோர் மீது சென்னை சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மருத்துவர் காந்தராஜ் என்பவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சில நடிகைகளின் பெயரை குறிப்பிட்டு 30 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்து நடித்தாக குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நடிகர் சங்க விசாகா கமிட்டித் தலைவி ரோகிணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த வாரம் புகாரளித்தார்.