திருவள்ளூர் மாவட்டம் வழுதலம்பேட்டில் இருதரப்பு மோதலால் கோயிலுக்கு வைக்கப்பட்டிருந்த சீலை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அகற்றி இருதரப்பினரும் ஒன்றாக வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதியன்று எட்டியம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெற்ற போது ஒருதரப்பினரை மற்றொரு தரப்பினர் வழிபாடு நடத்த அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், கோயிலுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் நடத்தப்பட்ட இருதரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் பொதுமக்களுடன் ஊர்வலமாகச் சென்று வழிபாடு நடத்தினர்.