கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின்போது, ஆட்டம் பாட்டம் என இருந்த இளைஞரை போலீசார் தாக்கியதில் அவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு, இந்து அமைப்பினரும், ஊர்வலத்தினரும் கண்டனம் தெரிவித்து, இளைஞரைத் தாக்கிய போலீசார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி, ஊர்வலத்தை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜக எம்.எல்.ஏ காந்தி உள்ளிட்டோர் வந்து, போலீசாரிடம் பேச்சு நடத்தியும், 4 மணி நேரத்துக்கும் மேலாக ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது. மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் வந்து, தொடர்புடைய போலீசார் நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதி அளித்ததையடுத்து, ஊர்வலம் புறப்பட்டு சங்குத் துறை கடலில் சிலைகள் கரைக்கப்பட்டன.