கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில்,பூ வியாபாரிகள் இணைந்து சுமார் இரண்டு டன் மலர்களால் ஆன அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடினர், இந்த ஆண்டு சுமார் 200 டன் அளவிற்கு பூக்கள் விற்பனை ஆகி உள்ளன.
விற்பனையாகாத மலர்களை அங்குள்ள வியாபாரிகள் ஆண்டுதோறும் தோவாளை மலர் சந்தையில் பெரிய அத்தப்பூ கோலமிட்டு கொண்டாடுவது வழக்கம் இந்த ஆண்டும் பிரம்மாண்டமான அத்தப்பூ கோலத்தைக் காண்பதற்காக ஏராளமான பொதுமக்களும்,சுற்றுலா பயணிகளும் திரண்டனர்