​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காலநிலை மாற்றத்தால் பவளப்பாறை திட்டுக்கள் அழியாமல் இருக்க சீன ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டுபிடிப்பு

Published : Sep 15, 2024 7:03 PM

காலநிலை மாற்றத்தால் பவளப்பாறை திட்டுக்கள் அழியாமல் இருக்க சீன ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டுபிடிப்பு

Sep 15, 2024 7:03 PM

காலநிலை மாற்றத்தால், ஆழ்கடல் பவளப்பாறைத் திட்டுக்கள் அதன் நிறத்தை இழந்து வருவதால் அதனை பாதுகாக்க சீன ஆராய்ச்சியாளர்கள் தீர்வு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி பயோமிமெடிக் மந்தா கதிர்களை பவளப்பாறைத் திட்டுக்கள் மீது செலுத்தி அதற்கு மறுவாழ்வு கொடுக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கடல்வாழ் உயிரின வடிவில் ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ள சீன ஆராய்ச்சியாளர்கள், அதில் கதிர்வீச்சு கருவிகளை பொருத்தி கடலின் ஆழத்திற்கு அனுப்புகின்றனர்.

நிறத்தை இழக்கும் பவளப்பாறைத் திட்டுக்களை ரோபா அடையாளம் கண்ட பிறகு அதன் மீது கதிர்வீச்சுகளை செலுத்துகின்றனர்.