ஜார்க்கண்ட் மாநிலம் வழியாக இயக்கப்படும் 6 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அம்மாநிலத்தின் டாடா நகரில் இருந்து வந்தே பாரத் ரயில்களை பிரதமர் தொடங்கி வைக்க திட்டமிட்டிருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரில் நிகழ்ச்சிக்கு செல்ல முடியவில்லை.
இதை தொடர்ந்து ராஞ்சியில் இருந்து காணொலி வாயிலாக வந்தே பாரத் ரயில்களை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஏழைகள், பழங்குடியினர், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் உள்ளிட்டோரின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக கூறினார்.
பிரதமரின் ஜன்மன் திட்டம் மூலம் மிகவும் பின்தங்கியுள்ள பழங்குடியினருக்கு அரசுத் திட்டங்களின் பலன்கள் கிடைப்பது உறுதி செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.