தமது பதவியை 2 நாட்களில் ராஜினாமா செய்ய உள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
மதுபானக்கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி சிறைக்கு சென்ற கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தின் கடும் நிபந்தனைகளுடன் ஜாமீனில் வெளியே வந்தார்.
முதலமைச்சர் அலுவலகம் மற்றும் தலைமைச் செயலகத்திற்கு செல்லக்கூடாது, அதிகாரப்பூர்வ அரசு கோப்புகளில் கையெழுத்திட அனுமதி இல்லை உள்ளிட்ட நிபந்தனைகள் அவருக்கு விதிக்கப்பட்டன.
இந்நிலையில், டெல்லியில் ஆம் ஆத்மி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் மத்தியில் பேசிய கெஜ்ரிவால், 2 நாட்களில் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடத்தி புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என கூறினார்.
பதவியில் இருந்து விலகி ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களை சந்திக்க உள்ளதாகவும், மீண்டும் தேர்தலில் வென்று முதல்வர் நாற்காலியில் அமர்வேன் என்றும் கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.