நடிகர் சங்கம் முயற்சித்து வரும் பல திட்டங்களுக்கும், முன்னெடுப்புகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என நடிகர் தனுஷ் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றுக்கொண்டு படம் நடித்துக் கொடுக்காத குற்றச்சாட்டில் தனுஷிற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் எவ்வித ஒத்துழைப்பும் வழங்காது என்று அறிவித்தது.
இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் பிரச்சனை முடிவுக்கு வந்ததுடன் தனுஷ் மீண்டும் இயக்கி நடிக்கும் புதிய படத்திற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.