மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் படுக்கை விரிப்புகளை நாள்தோறும் மாற்றுவதற்கான நடவடிக்கைகளை 12 வாரங்களில் எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
உள்நோயாளிகள் பிரிவில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வெளியேறிய பிறகும் படுக்கை விரிப்புகள் மாற்றப்படாமல் சுகாதாரமற்று துர்நாற்றம் வீசுவதால், எனவே ஒவ்வொரு நாளும் உள்நோயாளிகள் பிரிவில் உள்ள படுக்கையில் துவைத்த, வண்ணமயமான விரிப்புகளை மாற்றுவதற்கு உத்தரவிட வேண்டும் என பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ணத்தில் படுக்கை விரிப்புகளை மாற்றுவதற்கும், அந்த நாளுக்கான விரிப்பின் நிறம் வார்டு முன்பு காட்சிப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மருத்துவமனை முதல்வர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் உறுதியளிக்கப்பட்டதை அடுத்து வழக்கு முடித்துவைக்கப்பட்டது.