அமெரிக்காவில் 19 நிறுவனங்களுடன் 7 ஆயிரத்து 618 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும், இதன் மூலம் சுமார் 11 ஆயிரத்து 516 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அமெரிக்க பயணம் மேற்கொண்டு திரும்பிய முதலமைச்சர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளரை சந்தித்தார்.
அதிமுக ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 10 சதவீத முதலீடுக் கூட வரவில்லை என கூறிய முதலமைச்சர் தற்போது போடப்பட்டுள்ள ஒப்பந்தங்களில் 100 சதவீதம் முதலீடு வரும் என தெரிவித்தார்.
அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளரை மத்திய அமைச்சர் நடத்திய விதம் கண்டிக்கத்தக்கது என தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மெட்ரோ ரயில் நிதி மற்றும் கல்வித்துறை நிதி விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்திக்க உள்ளதாகவும் கூறினார்.
விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.