​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்ட பணிகளுக்கு பொது முதலீட்டுக் குழு பரிந்துரைப்படி, ரூ. 7,425 கோடியை நிதி வழங்க தமிழக அரசு கோரிக்கை

Published : Sep 14, 2024 7:54 AM

மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்ட பணிகளுக்கு பொது முதலீட்டுக் குழு பரிந்துரைப்படி, ரூ. 7,425 கோடியை நிதி வழங்க தமிழக அரசு கோரிக்கை

Sep 14, 2024 7:54 AM

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு பொது முதலீட்டுக் குழுவின் பரிந்துரைப்படி, 7 ஆயிரத்து 425 கோடி ரூபாய் நிதி வழங்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கையில், மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்டமானது, மத்திய நிதிப் பங்களிப்பு திட்டமாக நடைமுறையில் உள்ளதாகவும், இந்த திட்டத்தில் இதுவரை 18 ஆயிரத்து 564 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு நிறுவனங்களிடம் கடனாகப் பெற்ற 6 ஆயிரத்து 802 கோடி ரூபாயுடன், தமிழக அரசு தரப்பில் 11 ஆயிரத்து 762 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாகவும், மத்திய அரசு பங்களிப்பான 7,425 கோடி ரூபாயில் இதுவரை ஒரு ரூபாயைக் கூட விடுவிக்கவில்லை என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.