சென்னை, கோவையைப் போல் திருச்சியிலும் 38 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட இரட்டை வாய்க்கால் பகுதியில், 230 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பில், கழிவு நீர் ஊற்று நிலையம் அமைத்து பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பின்னர் இதனை தெரிவித்தார்.