​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுரையில் பெண்கள் விடுதியில் பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து 2 பெண்கள் உயிரிழப்பு, 4 பெண்கள் காயம்

Published : Sep 12, 2024 12:02 PM

மதுரையில் பெண்கள் விடுதியில் பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து 2 பெண்கள் உயிரிழப்பு, 4 பெண்கள் காயம்

Sep 12, 2024 12:02 PM

மதுரை கட்ராபாளையத்தில் உள்ள விசாகா பெண்கள் தங்கும் விடுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர். விடுதியில் இருந்த பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் கரும்புகை உருவானதால் விடுதியில் இருந்த பெண்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இந்த தீபத்தில் சிக்கி பரிமளா மற்றும் சரண்யா ஆகிய இரண்டு பெண்கள் உயிர் இழந்தனர். மேலும் நான்கு பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.