பிரதம மந்திரி கிராம சடக் யோஜனா திட்டத்தின் கீழ் நாட்டின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் 62 ஆயிரத்து 500 கிலோமீட்டர் சாலைகளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மொத்த திட்ட மதிப்பீடு 70 ஆயிரத்து 125 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்காக சுமார் 50 ஆயிரம் கோடியும் மாநிலங்களின் பங்களிப்பாக சுமார் 21 ஆயிரம் கோடியும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அனைத்து பருவ காலங்களுக்கும் ஏற்றபடியான சாலைகள் அமைக்கப்படும் புதிய பாலங்கள் கட்டப்படும் என்றும் கிராமங்களை நகரங்களுடன் இணைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது