​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நள்ளிரவு 12 மணிக்கு திகில் புளியமரத்தில் மோதிய பைக் பலியான நண்பனுக்காக உயிர்தியாகம்..! மின்கம்பத்தில் ஏற வைத்தது யார் ?

Published : Sep 12, 2024 6:22 AM



நள்ளிரவு 12 மணிக்கு திகில் புளியமரத்தில் மோதிய பைக் பலியான நண்பனுக்காக உயிர்தியாகம்..! மின்கம்பத்தில் ஏற வைத்தது யார் ?

Sep 12, 2024 6:22 AM

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இருசக்கரவாகனத்தில் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் புளியமரத்தில் மோதி உயிரிழந்த நிலையில், விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நண்பனை காப்பாற்ற இயலாத விரக்தியில் மின் கம்பத்தில் ஏறி இளைஞர் உயிரைமாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

தேனிமாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயக்குமார், இவருக்கு நிஜானந்த், நிவேதன் என இரு மகன்கள் உண்டு. சம்பத்தன்று கோம்பைக்கு நண்பரும் உறவினருமான ஆனந்தராஜுடன் இரு பைக்குகளில் நிஜானந்த், நிவேதன் ஆகியோர் சென்றனர்.

நள்ளிரவு 12 மணியளவில் 3 பேரும் இரு பைக்குகளில் வீடு திரும்பிகொண்டிருந்தனர். கருகோடை என்ற கிராமத்தில் அதிவேகமாக வந்த போது நிஜானந்த் ஓட்டி வந்த பைக் சாலையோர புளியமரத்தில் பயங்கரமாக மோதியது. அலறல் சத்தம் கேட்டு முன்னால் பைக்கை ஓட்டிச்சென்ற ஆனந்தராஜும், நிவேதனும் திருப்பி வந்தனர். இருட்டுக்குள் பலத்த ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிஜானந்தை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

நிஜானந்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்ததால், நண்பனை காப்பாற்ற இயலவிலையே என்று அழுதபடியே ஆனந்தராஜ் தனியாக சென்று அமர்ந்திருந்தார். இந்த நிலையில் உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்த போது ஆனந்தராஜையும் அவரது பைக்கையும் காணவில்லை. பின்னர் தேடிப்பார்த்த போது விபத்து நடந்த புளியமரத்தடியில் கருகிய நிலையில் ஆனந்தராஜ் சடலமாக கிடந்தார். அவரது சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர்.

அதிகாலை 2 மணியளவில் மருத்துவமனையில் இருந்து விபத்து நடந்த இடத்திற்கு தனது பைக்கை எடுத்துக் கொண்டு சென்ற ஆனந்தராஜ், புளியமரத்தடியில் நிஜானந்தின் காலணிகள் சிதறி கிடந்த இடத்தின் அருகே தனது இரு காலணியையும் கழட்டிபோட்டு விட்டு, அதன் அருகில் உள்ள மின்கம்பத்தில் ஏறி உயர் அழுத்த மின்கம்பியை பிடித்து உயிரை மாய்த்துக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மின்வாரிய தற்காலிக ஊழியரான ஆனந்தராஜ் , நிஜானதின் உறவினராக இருந்தாலும் சிறுவயதில் இருந்தே இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததாக கூறப்படுகின்றது.

தனது கண்ணுக்கு முன்பு உயிருக்கு போராடிய நண்பனை காப்பாற்ற இயலாத விரக்தியில் அவர் இந்த சோக முடிவை தேடிக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.