தமிழகத்தின் பெரும்பாலான பத்திரப்பதிவு அலுவலகங்களில் காலை 11 மணி முதல் 12 மணிவரை பத்திரப் பதிவு உள்ளிட்ட சேவைகள் முடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒரே நேரத்தில் அதிகமான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதே இணையதளம் முடங்கக் காரணம் என கூறப்படுறிது. இதனை நிர்வகித்து வரும் டாடா நிறுவனம் சரி செய்த பிறகு பத்திரப்பதிவு துவங்கியதாக பதிவுத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
பத்திரப்பதிவு அதிகமாக நடைபெறும் முகூர்த்த நாட்களில் இணையதளம் முடங்குவது அடிக்கடி நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், இணையதள முடக்கத்திறக்கான 10 காரணங்களை கண்டறிந்து அதனை உடனுக்குடன் நிவர்த்தி செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.