​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தலின் மையமாக மாறும் தமிழகம்.. காவல்துறை தடுக்க தவறிவிட்டது - அன்புமணி குற்றச்சாட்டு

Published : Sep 09, 2024 3:15 PM

மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தலின் மையமாக மாறும் தமிழகம்.. காவல்துறை தடுக்க தவறிவிட்டது - அன்புமணி குற்றச்சாட்டு

Sep 09, 2024 3:15 PM

உலக அளவிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் மற்றும் அதைத் தயாரிப்பதற்கான மூலப்பொருள் சூடோபெட்ரின் போன்றவற்றின் கடத்தல் மையமாக தமிழ்நாடு மாறி வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக பா.மக. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021-ஆம் ஆண்டில் தமிழகத்தில் 12 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதன் அளவு 2022-ல் 66 கிலோவாகவும், 2023-ல் 81 கிலோவாகவும் அதிகரித்திருப்பதாகவும் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களில் 10 சதவீதம் கூட தமிழக காவல்துறை பறிமுதல் செய்யவில்லை எனவும், 90 சதவீதத்திற்கும் மேல் மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவினர் தான் பறிமுதல் செய்துள்ளனர் என அன்புமணி தெரிவித்துள்ளார்.