தி.மு.க. ஒருங்கிணைப்புக் குழுவின் பணிகளை அமெரிக்காவில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக ஆய்வு செய்தார்.
முப்பெரும் விழா ஏற்பாடுகள், தி.மு.க. பவளவிழா ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்ததுடன், கையெழுத்தாகும் முதலீடுகள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அமெரிக்கவாழ் தமிழர்கள் அளித்த வரவேற்பு, சிகாகோவில் தமிழர்களுடனான சந்திப்பு பற்றியும் முதலமைச்சர் குறிப்பிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்குத் திரும்பியபின் தி.மு.க.வில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்த பரிந்துரைகளை ஒருங்கிணைப்புக்குழு வழங்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.