காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததைஅடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று வினாடிக்கு 18 ஆயிரத்து 553 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை வினாடிக்கு 16 ஆயிரத்து 194 கன அடியாக குறைந்தது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 19 ஆயிரம் கன அடியும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.