மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி சமூகத்தினர் இடையே ஏற்பட்டுள்ள துப்பாக்கிச் சூடு, மற்றும் வன்முறைச் சம்பவங்களால் 6 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, பதற்றம் நிறைந்த பகுதிகளில் கூடுதல் போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். குகி சமூகத்தைச் சேர்ந்த போராளிகள் ட்ரோன்கள் மூலம் வெடிபொருள்களை வீசி தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
மாநிலத்தில், பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்குப் பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்று போராடும் நிலையில், அதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவிப்பதால், கடந்த ஓராண்டுக்கும் மேலாக இரு சமூகத்தினருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிற