தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் செலவில் 70 அடி உயரம், 50 டன் எடை உள்ள விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
கைரதாபாத்தில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை அமைக்கும் வழக்கம் துவங்கி 70 ஆண்டுகள் ஆவதை குறிப்பிடும் வகையில், 70 அடி விநாயகர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இந்த சிலையை அமைக்கும் பணியில் தமிழ்நாடு,ஆந்திரா கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த நூறுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் கடந்த ஒரு மாத காலமாக ஈடுபட்டதாக ஏற்பட்டாளர்கள் கூறினர்.