ரஷ்யாவினால் ஏவப்பட்ட 44 ட்ரோன்களில் 27 டிரோன்களை ஒரே இரவில் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. ஷாஹெத்-131 மற்றும் ஷாஹெட்-136 ட்ரோன்கள் மற்றும் கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணைகளையும் ரஷ்யா ஏவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாவ்லோகிராட் நகரில் நடைபெற்ற தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 30 பேர் காயமடைந்ததாகவும், கிவ் பிராந்தியத்தில் வான் பாதுகாப்பு செயல்படுத்தப்பட்டதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லையென ராணுவம் தெரிவித்துள்ளது. லியுபோடின், லவிவ், மைக்கோலைன் பகுதிகளில் நடைபெற்ற தாக்குதலில் வீடுகள், மின்கம்பிகள், எரிவாயுகுழாய்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.