திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் மாடு காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்திக் கொண்டிருந்த காவல் ஆய்வாளரை செல்ஃபோனை மறைத்து வைத்து வீடியோ எடுத்த இளைஞரை அங்கிருந்த காவலர்கள் தாக்கிய வீடியோ வெளியாகி உள்ளது.
மா.மு.கோவிலூரைச் சேர்ந்த முகமது நஸ்ருதீன் என்பவரது மாடு திருடு போனது குறித்து காவல் கண்காணிப்பாளர் முதல் மாவட்ட ஆட்சியர் வரையில் புகார் அளித்துள்ளார்.
அதில் மாடு திருடு போகவில்லை என காவல் ஆய்வாளர் பதில் அளித்த நிலையில் அதுகுறித்து கேட்பதற்காக முகமது நஸ்ருதீன் அவரது மகன் முகமது நசீர் மற்றும் உறவினர் ஒருவர் காவல் நிலையம் சென்றுள்ளனர். அவர்கள் காவல் ஆய்வாளர் சந்திரமோகனுடன் பேசிக் கொண்டிருந்ததை முகமது நசீர் வீடியோ பதிவு செய்த போது தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.