​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீரேற்று புனல் மின் திட்டங்களுக்கான கொள்கையை வெளியிட்ட தமிழக அரசு..!

Published : Sep 06, 2024 3:46 PM

நீரேற்று புனல் மின் திட்டங்களுக்கான கொள்கையை வெளியிட்ட தமிழக அரசு..!

Sep 06, 2024 3:46 PM

நீரேற்று புனல் மின் திட்டங்களுக்கான கொள்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.அதில், நீரேற்று புனல் மின் திட்டம் என்பது மின்சாரத்தை சேமிக்கும் மின் நிலையங்களாகும் என்றும் பகலில், சூரிய மின்உற்பத்தி நேரங்களில் நீரை உயரத்தில் உள்ள நீர்த்தேக்கத்திற்கு ஏற்றம் செய்து மின்சார ஆற்றல் சேமிக்கப்படும் என்றும், இரவு நேரங்களில், மின்சார தேவை அதிகமாக இருக்கும் போது, சேமித்து வைக்கப்பட்ட நீரானது டர்பைன்கள் வழியாக விடப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வரும் 2030-ஆம் ஆண்டில் 20,000 மெகா வாட் சூரிய மின்உற்பத்தி நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், சூரிய மின் நிலையங்களில் உற்பத்தியாக உள்ள அதிகப்படியான பசுமை எரிசக்தியை சமப்படுத்தி மின் கட்டமைப்பில் மின்சாரமாக மாற்றி பயன்படுத்த நீரேற்று புனல் மின் திட்டங்கள் கொள்கை வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.