​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தெற்கு ரயில்வே இன்ஜினியர் டிஜிட்டல் அரெஸ்ட்... ரூ.5 கோடி கேட்டு மிரட்டிய மோசடிக் கும்பலுக்கு போலீசார் வலை

Published : Sep 04, 2024 2:14 PM

தெற்கு ரயில்வே இன்ஜினியர் டிஜிட்டல் அரெஸ்ட்... ரூ.5 கோடி கேட்டு மிரட்டிய மோசடிக் கும்பலுக்கு போலீசார் வலை

Sep 04, 2024 2:14 PM

மும்பையில் இருந்து சி.பி.ஐ அதிகாரி பேசுவதாகக் கூறி சென்னை தேனாம்பேட்டையில் வசிக்கும் தென்னக ரயில்வே சீனியர் இன்ஜினியர் ராம் பிரசாத் என்பவரை பெரியமேடு லாட்ஜ் அறையில் வெளித் தொடர்பின்றி 2 நாட்கள் டிஜிட்டல் அரெஸ்ட் செய்த ஆன்லைன் மோசடிக் கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

ஆதார் கார்டை பயன்படுத்தி மூன்று வங்கிகளில் 38 கோடி ரூபாய் கடன் மோசடி செய்யப்பட்டுள்ளது, இவ்வழக்கில் இருந்து விடுவிக்க 5 கோடி ரூபாய் கேட்டு மோசடிக் கும்பல் மிரட்டியதும் தெரியவந்துள்ளது.

ராம்பிரசாத்தின் மனைவி அளித்த புகாரில் அவரது செல்போன் இருப்பிடத்தை டிராக் செய்து அவரை மீட்டதாக தேனாம்பேட்டை போலீசார் கூறியுள்ளனர். சி.பி.ஐ அதிகாரிகளே, போலீசாரோ யாரையும் வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு விசாரிக்க மாட்டார்கள் என்றும், இது போன்ற கும்பலை நம்பவேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.