கடல் வழியாக தீவிரவாத ஊடுருவலை தடுக்கும் வகையில் நடத்தப்படும் சாகர் கவாச் ஒத்திகை தமிழக கடலோர மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் போன்று வேடமணிந்து நுழைய முயற்சிக்கும் படையினரை சரியாக கண்டறிந்து தடுப்பதே இந்த ஒத்திகையின் நோக்கம்.
தனுஷ்கோடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் ரோந்து மேற்கொண்ட கடலோர பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகள் போல் வேடமணிந்து பதுங்கிய 14 பேரை பிடித்தனர்.
கடலூரில் தீவிரவாதிகளைப்போல் வேடமணிந்த 4 பேரை ரோந்துப் பணி மேற்கொண்ட கடலோர பாதுகாப்புப் படையினர் பிடித்தனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை, தூத்துக்குடி மற்றும் நாகப்பட்டினம் வேதாரண்யம் ஆகிய கடற்கரைகளில் கடலோர பாதுகாப்புப் படையினர் படகு மூலம் ரோந்துப்பணி மேற்கொண்டனர்.