கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சிப்காட் அருகே மாலை நேர சிறப்பு வகுப்பை முடித்த தனியார் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்ற அப்பள்ளி பேருந்து சாலையோர மரத்தில் மோதியதில் 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயமடைந்தனர்.
மற்றொரு தனியார் பேருந்து அதிவேகமாக விபத்து ஏற்படுத்துவது போல் தங்கள் பேருந்தின் குறுக்கே வந்து சென்றதால், பேருந்தை திருப்ப முயற்சித்தபோது கட்டுப்பாட்டை இழந்ததாக தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.