தமிழகத்தில் 9 அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்பியதும் இதற்கான உத்தரவுகளில் கையெழுத்திடுவார் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறினார்.
கும்பகோணத்தில் நடைபெற்ற மாவட்ட சுகாதார அலுவலர்கள், சுகாதார இணை இயக்குனர்கள் ,அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.