திருப்பூர் இடுவாய் பகுதியில் உள்ள 2300 என்ற எண் கொண்ட டாஸ்மாக் கடையின் பாரில் அதிகாலையிலேயே விதிகளுக்கு புறம்பாக மதுவிற்கப்படுவதாகவும், கூடுதல் விலைக்கு மதுவாங்குவோருக்கு பிரியாணி, சுண்டல், தண்ணீர் ஆகியவை இலவசமாக வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்த காட்சிகள் வெளியாகியுள்ளன நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.