தென்கொரியாவில் காலநிலை மாற்றம் காரணமாக முட்டைகோஸ் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். கங்வான் மாகாணத்தில் மலைப்பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலத்தில் பயிரிடப்படும் முட்டைகோஸ், இதுவரை இல்லாத பாதிப்புக்கு ஆளாகி இருப்பதை ட்ரோன் கேமரா காட்சி மூலம் வெளிப்படுத்தினர்.
மண் நோய்கள் மற்றும் பல்வேறு கிருமி தாக்குதலால் சாகுபடி பரப்பு ஏற்கனவே பாதியாக குறைந்துவிட்ட நிலையில் தற்போது கடுமையான வெப்பமும் தாக்கி வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.