ஹமாஸ் பிடித்துச்சென்ற பிணைக் கைதிகளில் 6 பேரின் உடல் காசாவில் மீட்கப்பட்டதை அடுத்து பிரதமர் நேதன்யாகுவை கண்டித்து போராட்டங்கள் வெடித்துள்ளன. டெல் அவிவ் நகரில் திரண்டவர்களை போலீசார் கலைக்க முற்பட்டபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இரவு முழுவதும் சாலையில் தீயை கொளுத்தி போராட்டம் நடத்தியவர்கள், காசாவில் சிக்கியுள்ள எஞ்சிய பிணைக் கைதிகளை விடுவிக்க போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என்று முழக்கம் எழுப்பினர்.