மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்திற்குள் தன்னார்வலர்கள் உணவு வழங்க தடை விதிக்கப்பட்டதால், மருத்துவமனை நுழைவு வாயிலில் வழங்கப்பட்ட உணவு பொட்டலங்களை வாங்க பொதுமக்கள் குவிந்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கொல்கத்தா மருத்துவமனையில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மருத்துவமனை வளாகத்தில் உணவு அளிக்க தன்னார்வலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தடைவித்தார்.
இந்த நிலையில், ஸ்டார் நண்பர்கள் அறக்கட்டளையின் குட்டி யானை வாகனம் மருத்துவமனையின் வாசலில் நின்று உணவு பொட்டலங்களை வழங்கியபோது அங்கு பெண்கள் மற்றும் முதியோர் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காவல்துறையினர் மருத்துவமனை வாசலை மறைத்து உணவு விநியோகம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்திய நிலையிலும் அதே பகுதியில் வாகனத்தை நிறுத்தியதால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழி விட வேண்டியிருந்ததால், உணவுடன் வந்த வண்டி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதால் சாலைகளில் பொதுமக்கள் கையேந்தியபடி அங்குமிங்கும் ஓடி அவதிக்கு ஆளாகினர்.