​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மத்திய தரைக்கடல் தீவில் கண்டு பிடிக்கப்பட்ட பாலம்.. 6,000 ஆண்டு பழமை என விஞ்ஞானிகள் தகவல்..!

Published : Sep 02, 2024 7:06 PM

மத்திய தரைக்கடல் தீவில் கண்டு பிடிக்கப்பட்ட பாலம்.. 6,000 ஆண்டு பழமை என விஞ்ஞானிகள் தகவல்..!

Sep 02, 2024 7:06 PM

பிரான்சில் மத்திய தரைக்கடல் பகுதியில் தண்ணீருக்கடியில் கண்டுபிடிக்கப்பட்ட குகைப்பாலம், 6,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கடந்த 2000ம் ஆண்டு பிரான்சின் மல்லோர்கா தீவில் நீருக்கடியில் மூழ்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட 25 அடி நீளமுள்ள சுண்ணாம்புக்கல் பாலம் குறித்து 24 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வந்தனர்.

இதில், பாலத்தின் மீது படிந்த கனிமங்கள் மற்றும் கடல் நீர் மட்டத்தின் அதிகரிப்பைக் கணக்கிட்டு, பாலத்தின் வயதை கணக்கிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.