​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சேலத்தில் தற்காலிக ஓட்டுநரின் கவனக் குறைவால் தனியார் பேருந்தும் அரசுப் பேருந்தும் மோதிய விபத்தில் 10 பேர் காயம்

Published : Sep 02, 2024 1:44 PM

சேலத்தில் தற்காலிக ஓட்டுநரின் கவனக் குறைவால் தனியார் பேருந்தும் அரசுப் பேருந்தும் மோதிய விபத்தில் 10 பேர் காயம்

Sep 02, 2024 1:44 PM

சேலம் வாழப்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையிலிருந்து இண்டிக்கேட்டர் போடாமல் வலது பக்கமாக திரும்பி அணுகு சாலையில் நுழைய முற்பட்ட அரசு பேருந்து மீது, தனியார் பேருந்து மோதியதில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

அரசு பேருந்தை ஓட்டிய தற்காலிக ஓட்டுநர் அஜித்குமார் வெள்ளாளகுண்டம் பிரிவில் எதிர் திசையில் தனியார் பேருந்து வருவதை கண்டுகொள்ளாமல், திடீரென சாலையை  குறுக்கே கடக்க முயன்றதே விபத்து காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த தனியார் பேருந்து ஓட்டுநர், குறுக்கே அரசுப் பேருந்து திரும்புவதை பார்த்து முடிந்த வரை வேகத்தை குறைத்து வலப்புறம் திருப்பியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.