இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கால் சென்டர் அமைத்து 200 பேரை பணியில் ஈடுபடுத்தி மோசடியில் ஈடுபட்டதாக கடலூர், பெங்களூரைச் சேர்ந்த 7 பேரை புதுச்சேரி போலீஸார் பெங்களூரில் வைத்து கைது செய்தனர்.
அலுவலகத்திலிருந்த 100 கம்பியூட்டர்கள், 5 கார்கள், 64 வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது. ஆன்லைன் ட்ரேடிங்க்கில் முதலீடு செய்தால் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் லாபம் கிடைக்குமென கூறப்பட்டதை நம்பி அரசு ஊழியர் கோகிலா, குளோபல் சாஃப்ட்வேர் என்ற நிறுவனத்திடம் 18 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். எந்த தொகையும் திரும்ப வராததால் அவர் போலீஸில் புகாரளித்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.