​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஹேமா கமிட்டியின் அறிக்கைக்கு நடிகர் மம்முட்டி வரவேற்பு..!

Published : Sep 01, 2024 7:44 PM

ஹேமா கமிட்டியின் அறிக்கைக்கு நடிகர் மம்முட்டி வரவேற்பு..!

Sep 01, 2024 7:44 PM

கேரள திரைத்துறையில் நடிகைகளின் பாலியல் புகார் தொடர்பான ஹேமா கமிட்டியின் அறிக்கையை வரவேற்பதாகவும், அதன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் நடிகர் மம்முட்டி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், மலையாள திரையுலகில் அதிகார மையம் என்று எதுவும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே நடிகையின் பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து நடிகர் முகேஷ் தன்னை கைது செய்வதற்கு பெற்ற நீதிமன்ற தடை உத்தரவு திங்கட்கிழமையுடன் நிறைவு பெற உள்ளதால், அவருக்கு ஜாமீன் வழங்க போலீசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முகேஷை காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

பாலியல் புகாரில் சிக்கிய மற்றொரு நடிகர் ஜெயசூர்யா தனது பிறந்தநாளையொட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், தம்மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் பொய் என்றும், அதை சட்டரீதியாக எதிர்கொள்ள போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.