சென்னை பொத்தேரியில் தனியார் கல்லூரி விடுதி மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் போதைப் பொருட்கள் வைத்திருந்ததாக ஒரு மாணவி மற்றும் 17 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவிக்கு அவரது சீனியர் மாணவரான காதலன் கஞ்சா பழக்கத்தை அறிமுகப்படுத்தியதாக போலீஸார் தெரிவித்தனர். மாணவ-மாணவிகள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு கஞ்சா சாக்லேட் விற்பனை செய்ததாக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்ட னர்.
இவர்களில் டப்லு என்பவன் ‘தாபாவில்’ வேலை செய்து கொண்டே கஞ்சா சாக்லேட் விற்பனை செய்ததாகவும் மகேஸ் குமார், சுனில்குமார் ஆகியோர் பெங்களூரிலிருந்து கஞ்சா சாக்லேட்டுகளை வாங்கி வந்து டப்லுவிடம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யும் பெங்களூர் கும்பலையும் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.