​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பழுதாகி நின்ற லாரியின் பின்புறம் மோதி விபத்து - டெம்போ ஓட்டுநர் பலி, 6 பேர் படுகாயம்

Published : Sep 01, 2024 1:26 PM

பழுதாகி நின்ற லாரியின் பின்புறம் மோதி விபத்து - டெம்போ ஓட்டுநர் பலி, 6 பேர் படுகாயம்

Sep 01, 2024 1:26 PM

ராசிபுரத்தை அடுத்த ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் பழுதாகி நின்ற லாரியின் பின்புறம் டெம்போ மோதியதில் ஓட்டுநர் பலியான நிலையில் 6 பேர் காயமடைந்தனர்.

திருச்சி மாவட்டம் மாயனூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் 7 பேர் கடந்த 2 நாட்களுக்கு முன் சமையல் பணிக்காக மைசூருக்கு சென்றுவிட்டு நேற்று இரவு டெம்போவில் மாயனூர் நோக்கி அதிவேகமாக சென்றபோது பழுதாகி சாலையோரம் நின்ற லாரியின் பின் மோதியதாக கூறப்படுகிறது.

லாரியின் பின்புறம் எச்சரிக்கை பலகை இல்லாததும் டெம்போ ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் அதிவேகமாக சென்றதுமே விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர்.